எல்லா நன்றியறிதல்களும்
பதிலுபச்சாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன
இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல
தம் திசைகளைதாமே அறியட்டுமென - மனுஷ்யப்புத்திரன்.
பதிலுபச்சாரங்களும்
உன்னைக் கொஞ்சம்
சிறுமைப்படுத்தவே செய்கின்றன
இன்றிலிருந்து உனது
எல்லாப் பரிசுகளையும்
நான் தரையில் விட்டுவிடுகிறேன்
ஈரம் காயாத நாய்க்குட்டிகளைப் போல
தம் திசைகளைதாமே அறியட்டுமென - மனுஷ்யப்புத்திரன்.
எல்லா நாட்களும் நினைவின் அடுக்குகளில் பதிந்து எப்போதும் கிடக்கப்போவதில்லை என்றாலும் சில நாட்கள், சில மனிதர்கள் , சில சம்பவங்கள் எப்போதும் மறந்திடாது. எப்போது முதலில் பார்த்தேன் என்று ஞாபகத்தில் தேடி துழாவி யோசிக்கையில், ஞாபகமே இல்லை என்கிற நிதர்சனம் உரைக்கிறது.
நடுவில் திடிரென எல்லோரும் பேசிக்கொண்டார்கள், அவள் கர்த்தரின் பிள்ளையானாள், சேவையின் கரங்களுக்காய் ஒப்புவித்துக்கொண்டாளென்று. நடுவில் யாரோ ஒருவரின் திருமணத்தில் உன்னை பார்த்தேன், பறவையின் சிறகுகளை எல்லாம் உடைத்து விட்டு அழகாயிருப்பதாய் சொல்லிக்கொள்கிறவர்களைப்போல உன் உறவுகளையும் பார்த்தேன். இளமைக்கான சம்பந்தமில்லாத அமைதியுடன் ,பைபிளின் ஏதோ ஒரு அதிகாரத்தை ஏதோ ஒரு காரணத்தோடு , வெகு அமைதியாய் ஜெபித்துக்கொண்டிருந்தாய். அசிரத்தையாய் ஏதோ கத்திக்கொண்டிருந்த என்னிடம் வந்து , அமைதியின் தேவைகள், கர்த்தரின் ஊழிக்காலம் என்றெல்லாம் கதையளந்து கொண்டிருந்தவனைத்தாண்டி வந்து , வழக்கமான கேள்விகள் தவிர்த்து , கடவுள் நம்பிக்கையில்லையா என்றாய்.
கடவுள் மேல் மட்டுமில்லை மனிதர்கள் மேலும் நம்பிக்கையில்லை என்றேன். வாழ்வின் தேவைகள்/ நெருக்கடிகள்/நிராகரிப்புகளின் காலம் அது. நான் என்னவாகப்போகிறென்ற எந்த ஒரு நம்பிக்கையின் நுனியுமற்ற காலம் அது. வழக்கமான திமிரோடு உன் கடவுளிடம் சொல்லி ஒரு 1000 ரூபாயைத்தர சொல் , பிறகு நம்புகிறேன் என்றேன். உன்னை சீண்டுவதற்கான வார்த்தையாடல் அதுவென்றாலும் , நீ பதிலாய் 100 ரூ தந்தால் நானும் நம்புவேன் என்றாய்.
தொடர்ச்சியான வாழ்வின் காட்டாற்று வெள்ளத்தில் நான் எங்கங்கோ அடித்து செல்லப்பட்டுக்கொண்டிருந்தேன். நடுவில் ஏதோ ஒரு நாளில் , வெள்ளி சிலுவையணிந்த உன்னைக்கண்டேன். ஒரு நொடியில் வழக்கமான புன்னகையைத்தாண்டியும் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்லி சென்றாய். நேசத்தின் கைப்பிடித்து உலகை எல்லாம் வென்றதாய் இறுமாந்திருந்த காலமது. எல்லாவற்றையும் உடைத்து எரிந்து கொண்டிருந்தேன். நான் என்னவானாலும் சரியென்பதாய்.
பருவத்தில் மாற்றங்கள் நிகழ்கையில் பழுப்புகள் உதிரும், பச்சைகள் பட்டுப்போகையில் மட்டுமே வருத்தங்கள் மிஞ்சும். சில உருமாற்றங்களுக்குப்பின் நான் ஒரு நச்சுப்புழு என்கிறதை அறிந்து கொண்ட போது மட்டுமே உடைந்து போனேன். எங்கிருந்தோ என்னை ஆண்டுகொண்டிருந்த நேசத்தின் கரங்களின் பிடிகள் இறுகிப்போனது. இனியென்ன என்ற கேள்விக்கு எதுவுமில்லை என்கிற பதிலுக்குப்பதிலாய்
நீதானென்றேன். அதிர்ச்சிகள்/ மறுப்புகள் , கடவுளின் பெயரால் ஏதேதோ செய்திகள். எல்லாம் பொறுத்தும் நீதான்கையில் , நீ அழைத்து சொன்னாய். நான் உன்னை, உனக்காக பார்த்துக்கொள்ள வருவதாய்.உறவுகள் கேள்விகள் , பதில்கள் மற்றும் முடிந்தால் பார்த்துக்கொள்ள சொல்லி எதிரியாடல்கள். நான் உன்னிடம் சொன்னது இது எனக்கான வாழ்வு, இனி நமக்கானதாய் இருக்கும் எப்போதும் என்று மட்டுமே.
வழக்கம் போலவே நாளை வருவதாய் முதல் நாள் அழைத்து சொன்னேன். உனக்கு என் மேல் என்ன நம்பிக்கையிருக்கும் என்றெல்லாம் எதுவும் தெரியாமல். ஒவ்வொரு கையெழுத்திற்கும் முன்னால் என்ன யோசித்திருப்பாய் என்றெல்லாம் என்னால் அப்போது யோசித்து பார்க்க முடியவில்லை. நட்புகள் துணையோடு சேர்ந்து முடிந்த திருமணம்.
ஆறு நீண்ட மாதங்களுக்குப்பின்னாலே உன்னை நானும் என்னை நீயும் சந்திக்க முடிந்த அன்று , உன் கண்ணீரும் தவிப்பும் என்னை மிரள வைத்தது . நேசம் என்பதன் எல்லா அர்த்தங்களையும் பூரணப்படுத்தியவள் நீதான். என் எல்லா விளையாட்டுத்தனங்களையும் எப்போதும் போலவே நேசிக்கிறவள் . என்னால் இத்தனை விளையாட்டுத்தனமாக இன்னமும் வாழ முடிவதன் ஒரே காரணம் நீ முழுக்க என் காதலியாக இன்னும் இருப்பதால்தான்.
திருமணத்திற்குப் பின்னான ஒரு ஆண்டுகள் - வாழ்வின் காதலை எக்கணமும் விட்டு விலகிடாமல் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்திக்கொண்டிருக்கின்றன. என்னவாவேன்கிற ஏக்கங்கள் தொலைந்து இதுதான் நான் என்கிறதை / பெருமிதத்தை பெருக செய்தவளை நேசிப்பதைத் தவிர்த்து என்ன செய்திட முடியும்.
நாளைக்கு லீவ் போடேன் என்கையில், நாளைக்கு என்னடி விசேசம் என்றேன் வழக்கம் போல,
முதல் திருமண நாளை எப்படி கொண்டாடலாம் என்கிற யோசனைகள் சுற்றி வந்தாலும் வழக்கமான உன் சம்பரும் , பாகற்காயும் தயாராயிருக்கும் என்பதில் லேசான பயம் வந்தாலும் . வாழ்வின் எல்லா நொடிகளும் வாழ்கிற உணர்வைத் தந்துகொண்டிருக்கும் சாந்தாமணிக்கு என் காதல் நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்.
இந்த கடித்தில் கொட்டிக்கிடக்கும் நேர்த்தியும்,நேர்மையும்,அன்பையும் விட உங்கள் மனைவிக்கு வேறென்ன பரிசு கிடைக்கப்போகிறது..வாழ்த்துக்கள்..கென்.தொடர்ந்து படித்து வந்தாலும் இதுதான் என் முதலாவது பின்னூட்டம் என்று நினைக்கிறேன்......
ReplyDeleteகர்த்தரின் பிள்ளைகளுக்கு என் இனிய திருமண வாழ்த்துக்கள். வருடங்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் செல்லட்டும்
ReplyDeleteநன்றிகள்
ReplyDeleteசிவக்குமார் சார்,
நன்றிகள்
மகி
கர்த்தரின் பிள்ளைகள் :)
கண்ணு பட்ரும்யா ஃபாதரே.
ReplyDeleteஉங்களுக்கும், சகோதரி சாந்தாமணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி ஜோசப் சார் :)
ReplyDeleteநிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்.
ReplyDelete