13-Nov-2010

இரவின் வார்த்தைகள்

உறக்கமற்ற என் இரவுகளை 
திசைமாறும் பிறை மணல்மேடுகளின் 
நாட்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறேன் 
தூரத்து இரவின் பாடலை 
வான்நீளும் தீயின் நாவுகளை 
அசைப்போட்டுக்கிடக்கும் ஒட்டகங்களை 
கரும்பனையாகும் பேரீச்சை மரங்களை 
வரிகள் தோறும் இடம்விட்டே 
எழுதி வைத்திருக்கிறேன் 

விடியலின் பெரும் தீயில் 
வெந்திருக்கும் வார்த்தைகளை 
தேடிக்கொள்வார் யாருமில்லையெனினும் 
இன்னுமொரு இன்னுமொரு இரவுகளிலும் 
எழுதி வைத்தே செல்வேன்

0 சொல்லிட்டுப்போனவங்க:

Post a Comment