ரமதான் கரீம்
ரமதான் நோன்பு தொடங்கிய முதல் நாளில் புதிய சைட் ஒன்றின் வேலைக்கான ஆயத்தங்களை துவங்க நானும் என் இன்ப்ரா டீம் லீடரும் அங்கு தேவைகளை ஆராயச் சென்றோம்.
மதியம் 2 மணிக்கு சென்றபோது அங்கு எல்லாமே திறந்த வெளியில் இருப்பதையும் வேலை செய்பவர்கள் மிகுந்த கடினத்துடன் சூரியனின் கொடூர கரத்தில் ,இங்கு கிட்டத்தட்ட 48 டிகிரி வெப்பநிலை நிலவுவதால் யாராலையுமே தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாய் வெயிலில் வேலை செய்ய முடியாது.
11 மணிக்கு முடித்திருக்க வேண்டிய வேலை அவசர நிலையினால் தொடர்வதாய் சொன்னார்கள். எங்கள் விசிட்டை முடித்து வருகையில் என் டீம் லீடர் மயக்க நிலைக்கே வந்திட்டார். கார் நிற்கும் இடம் எங்களுக்கு 1 கிமீ மேலாய் இருந்தது அப்போதுதான் புரிந்தது.
எனக்கும் மயக்கம் இருந்தாலும் தண்ணீர் குடித்தால் போதுமென்ற நிலையில்தான் இருந்தேன். ரமதான் நோன்பு மாதத்தில் பொதுவிடத்தில் நீரோ உணவருந்தவதோ தடை செய்யப்பட்டிருக்கிறது இங்கு.
அவரோ என்னால் முடியலைங்க நான் ஓரமா நின்னுக்கிறேன், காரை இங்கு எடுத்திட்டு வந்திடுங்க, ஏசியில கொஞ்ச நேரம் இருந்தால் நான் சரியாகிப்பேன் என்றார்.
எனக்கு லைசென்ஸ் இல்லை, இங்கு லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது மிகப்பெரிய குற்றம். இருந்தாலும் ஓமனில் பாலைவன ஏரியாக்களில் போலீஸ் கேமராக்களோ, போலீஸ் காரர்களோ இல்லாத இடங்களில் கார் ஓட்டுவேன் திருட்டுத்தனமாக. அதை செய்யலாம் என்றாலும் ஒரு கிமீ போக வேண்டிய கட்டாயம்.
சிறிது தூரத்தில் டைல்ஸ் கண்டய்னெரில் டைல்ஸ் இறக்கிக்கொண்டிருந்தார்கள். பார்த்த உடனே தெரிந்தது பாகிஸ்தானிக்கள் என்று. என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாய் போய் நிலைமையை சொன்னேன். மூன்று முஸ்லீம்களும் ஓடி வந்து என் டீம் லீடரை கிட்டத்தட்ட தூக்கி வந்து லாரி கேபினட்டில் படுக்க வைத்து ஏசியிலும் விசிறி விட்டார்கள்.
ஒருவர் எங்கிருந்தோ நீர் கொண்டு வந்து அவர் முகம் உடல் எல்லாம் நீரால் நனைத்து தண்ணீரைக்குடிக்கவும் வைத்தார்கள்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ரமதானின் முதல் நாள், அவர்கள் வெகு நிச்சயமாய் நோன்பில் இருக்கிறார்கள், ஆனாலும் எவனோ ஒருவனுக்காய் எல்லாவற்றையும் தாண்டி உதவினார்கள்.
கடவுள் எவனாயிருந்தாலும் முதலில் இவர்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி , எந்நிலையிலும் இவர்களின் மனம் மாறாதிருக்க செய்யட்டும்.
# காப்பாற்றப்பட்டவர் டேராடூனைச்சேர்ந்தவர், அவர் சட்டையைக்கழற்றிய போதுதான் நான் பூணூலைப்பார்த்தேன்.
காட்டு மல்லிப் பூத்திருக்க
http://www.raaga.com/player4/?id=155050&mode=100&rand=0.884530427865684
http://www.muziboo.com/gkanchana/music/sen/#
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை கோலோச்சிக்கொண்டிருந்தக்காலக்கட்டமது. 1988 -90 ஆக இருக்கலாம். பனங்குடியிலிருந்து அவர் வருவார். ஒரு பானையும் ஒரு கையை நுழைத்த சட்டையுமாய். ஆயி என்று தான் எல்லோரையும் அழைப்பார். டீ சொல்லு ஆயி என்றபடி டீக்கடையின் வாசலோரம் சம்மணமிட்டு அமர்ந்து எம்ஜிஆர் பாடல்கள் டிஎம் எஸ் குரலில் பாடுவார்.
அடிவயிற்றின் முட்டுக்கொடுத்தப் பானையில் ஒரு கையின் சில்லரைக்காசாலும் மற்றொரு கையாலும் தட்டிப்பாடுவதைக்கேட்க பெரும் கூட்டமே கூடும்.
இந்தப்பாடலையும் செந்தமிழ் தேன்மொழியாள் பாடலையும் நேயர் விருப்பமாக கேட்பவர்களிடம் கறாராக ஐம்பது பைசா கேட்பார். கொடுத்தால் மட்டுமே பாடுவார்.
அடுத்தடுத்த டிவி யுகங்களில் ஒரு டீக்கு கூட வழியில்லாமல் போன அவரை எப்போதோ சித்தாள் வேலைக்குப்போகையில் பார்த்த ஞாபகம் .
காலம் எத்தனை மனிதர்களை மறக்கடித்திருக்கிறது / மூழ்கடித்திருக்கிறது. காட்டு மல்லி பூத்திருக்க இந்தப்பாடலை இணையத்தில் ஏதேச்சையாக தேடிக்கேட்கையில் அடிவயிற்றில் பானையை வைத்து இசையமைத்துப்பாடிய அவரின் முகம் நிழலாடிப்போனது. ஞாபகங்களின் அடுக்குகளில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. நகர்வின் கணங்களில் கண்டுணராத எல்லாமே பதிந்தேயிருக்கிறது எங்கோ அதன் ஒரு மூலையில்..,
கடைசியாய் எனக்குப்பிடித்த மிகப்பிடித்த பாரதியார் பாடல்
பாரதியார்
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்
ReplyDeletehttp://ramasamydemo.blogspot.com/2010/09/3.html
Bloggerல் எழுதுவோர் கவனத்திற்கு
ReplyDeletehttp://ramasamydemo.blogspot.com/2010/09/blogger.html