நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான்,நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்..,
21-Jun-2010
அடிமையின் மரண வாக்குமூலம்
வானில் சிறகடிக்கும் சிட்டுக்குருவி ஒன்றை நினைத்துக்கொள்கிறேன். என் சுதந்திரத்தை உறுதி செய்வதை அதன் சிறகுகளின் வேக அசைவுகளோடு ஒப்பிட்டு மகிழ்கிறேன். மெல்ல மெல்ல தன்னிரக்கம் தொலைந்து சாத்தானின் மனமாய் மெல்லமிழ்கிறது. உன்னைக்கொலை செய்வதான கனவின் முடிவில் சந்தோசக் கூக்குரலிடுகிறேன். இது பாலையின் கடும் கோடைக்காலம் ஐம்பது டிகிரி செல்சியஸ்ஸின் வெப்ப நிலை பனிப்பொழிவதாய் நினைத்து நகர்கிறது.
பிரிவின் கொடும் கரங்களைத் தீண்ட விடாமல் உனக்கே திருப்பி அனுப்புகிறேன். அண்ட சராசரத்தின் ஒற்றைப்பெண்ணென நீ எண்ணிக்கொள்வதில் எனக்கு மிக மகிழ்ச்சிதான். மனம் எல்லா நிலைகளுக்குள்ளும் கலைந்து புரள்கிறது.எழும் நேரத்தின் எல்லைக்கோடுகளை உடைத்தெறிகிறது. நேசம் என்பதன் கடைசிச்சொட்டும் தீர்ந்தப்பின்னே வன்மத்தின் கடும் கரங்கள் நீள்கின்றன.
சங்குக்கழுத்தை நெரித்து நீ மூச்சுத்திணற கடைசி மூச்சுக்காற்றுக்காய் துடிப்பதை மிக மகிழ்வுடன் பார்த்து ரசிக்கிறேன். உன் கரங்களின் கண்களின் கெஞ்சல்கள் என்னை இன்னும் வெறிநிலைக்குள்ளாக்குகிறது. துடித்தடங்கும் முலைகளின் அசைவுகள் கலவிக்கான வெறியேற்றுகிறது. உயிர்ப்போன உடலின் ஆடைகளை கிழித்தெறிகிறேன். நாக்கு கடிபட்டு , ரத்தம் கசிய நிலைக்குத்திப்போன கண்களுடன் நீ வெகு கோரமாயிருக்கிறாய். மனதின் எல்லா செல்களுக்குள்ளும் மகிழ்வின் உற்சாக ஊற்று கொப்பளிக்கிறது. உன் நிர்வாண உடலின் , சதையின் பளபளப்பை வெறித்தக்கண்களால் உற்றுப்பார்க்கிறேன். எந்த நொடியும் உன் உடலுக்குள் உயிர்ப்பரவும் என்கிற என் எண்ணம் ஒன்றும் நிறைவேறப்போவதில்லை என்றாலும் ஏதோ ஒரு நப்பாசையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
வானம் பார்த்து சரிந்த முலைகளை என் கைகளால் தொட்டுப்பார்க்கிறேன். இந்த கூர்முலைகள் என்னை எத்தனை முறை கிளர்ச்சியூட்டி இருக்கிறது. இந்த உடலின் அசைவு எத்தனை இரவை உறக்கமில்லாமல் ஆக்கியிருக்கிறது. உன் வாய் வழி வழிந்த முத்தங்கள் என் நேசத்தின் எல்லா வேர்களிலும் காதலின் நீர்ப்பாய்ச்சியிருக்கிறது. இப்போது உயிரற்ற உடலின் இதழ்கள் வெளுத்துப்போய் அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
இனி என்ன செய்வதென்கிற யோசனையின் முடிவில் உறங்கிட நினைக்கிறேன்.உயிரற்ற உன் உடலோடு கட்டிக்கொண்டு படுக்கிறேன். விடியலின் பின் அழலாம் , கடைசியாய் ஒரு முறை புணர்ந்தும் கொள்ளலாம். இல்லாவிட்டால் தற்கொலை செய்யலாம். கடைசியாய் ஒரு முறை உயிர்திரும்புகிற வழியேதுமிருக்கிறதா என்பதை யோசிக்கலாம்.
இல்லையெனில்
உன்னை நோக்கி நான் என் காதலின் பெயரால் சொல்லலாம் , உடனே எழுந்து வா..,
வகைகள்
புனைவு
Subscribe to:
Post Comments (Atom)

இது புனைவு அல்லது எழுதப்போகும் என் நாவலின் முன்னுரை ;)
ReplyDeleteஅச்ச மூட்டுகிறது...
ReplyDeleteஅச்சமூட்டட்டும் ;)))))
ReplyDelete