08-Jun-2010

நீ என்பது காதல்


என்னிடம் கேட்காதே 
சொல்கிறபோதே 
தருவதாய் அசையும் 
உன் இதழ்களை 
என்ன செய்வது. 


என்ன செய்வது 
கிடைத்தப்பின் அடம்பிடிக்கும் 
முத்தத்தின் மனதை 



நாசியின் வெப்பக்காற்றில் 
உருகும் 
உடலின் தீ 
நகங்களின் கீறலில் 
பசியாறும் 
மனதின் நீ 

காதலின் தீராத இந்த 
காமத்தை 
என்னதான் செய்வது


என் செல்லக்குட்டிக்கு ,

முந்தின நாள் மழையில நனைஞ்சி குளிர் ஜீரத்தில இருந்தப்போவும் ஏதோ பேசப்போக வழக்கமான வெறித்தனத்தில செத்துப்போடி அப்போதான் நான் நிம்மதியா இருப்பேன்னு சொன்னதுக்காக ரெண்டு நாள் சாப்பிடாம‌ இருந்து சீரியஸ்ஸாகி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தே நீ.

தனியார் ஹாஸ்ப்பிட்டல்ல தயங்கி தயங்கி வந்தேன் , உன் அப்பா பெட்கிட்ட உட்கார்ந்து சாத்துக்குடி உரிச்சிட்டு இருந்தார், உங்க அத்தை எதையோ நறுக்கிட்டு ஜோக் அடிச்சிட்டு இருந்தாங்க. அரை நாள் அங்கேயும் இங்கேயுமா குட்டிப்போட்ட நாய் மாதிரி அலைஞ்சிட்டு இருந்தேன். உங்க அப்பா வெளில போன அடுத்த நிமிசம் புயல் மாதிரி உள்ள வந்தவன் , சும்மா வேற யாரையோ பார்க்க வந்த மாதிரி உங்க அத்தைக்கிட்ட சீனைப்போட்டுட்டு , கண்ணாலையே உன்கிட்ட மன்னிப்புக்கேட்டேன். ஏதேதோ சொல்லி அத்தையை ரிசப்சனுக்கு அனுப்பின நிமிசம் என் கையைப்பிடிச்சிட்டு என்னைப்பிடிக்கலையாடா, நான் சாகனுமாடான்னு அழுத , சத்தியமாடி அந்த நிமிசம் ரொம்ப அருவெறுப்பாகிடுச்சு எம்மேல என் கோபத்து மேல.

என்ன சொல்றதுன்னு தெரியாம கண் கலங்கி நின்னுட்டு இருந்தப்போ சர்வ சாதாரணமா கேட்டே, வேற எவளையோ, அதான் போன்ல மெசெஜ்ஜா தினம் அனுப்பிட்டு அலையுறாளே அவள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீயாடா, அதான் நான் சாகனுமாடான்னு கேட்டு முடிச்சிருக்க மாட்ட, பளாரன்னு உன் கன்னத்தில அறைஞ்சிட்டு தேவடியா செருக்கி , உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன் , ஹவ் ஆர் யூ ப்ரதர்ன்னு மெசேஜ் அனுப்புறவளை சேர்த்து வச்சிப்பேசாதன்னு , மயிறாப்போச்சு செத்து தொலைடின்னு வெறிப்பிடிச்சு கத்தி முடிக்க,

கன்னத்தை சாவகசமா தொடைச்சிட்டு உன் கூட நூறு வருசம் வாழாம சாக மாட்டேண்டான்னு சொல்லிட்டு சரி சரி கோவத்துல கத்தாம கூடையில இருக்கிற ஆப்பிள் எடுத்து சாப்பிட்டு போ, காலையில இருந்து வெளில வெய்யில்ல‌ நின்னுட்டு ஒன்னும் சாப்பிடாம இருந்திருப்பேன்னு சொன்னப்போ நிஜமாவே எனக்கு ஒன்னுதாண்டி தோனுச்சு.

இத்த‌னைக்காதலும் பாசமும் உம் மேல‌ என‌க்கு இருக்கான்னு தெரிய‌லை , உன்னோட‌ இத்த‌னைக்காத‌லைத் தாங்கிக்கிற‌ ச‌க்திக்கு க‌ண்டிப்பா என்கூட‌ நீ வாழ‌னும்னு நினைச்சிக்கிட்டேன். இத்த‌னை ஆசையோடும் , கோப‌த்தோடும்





அது என்னடி எப்போ பார்த்தாலும் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்பிட்டே இருக்கே, எனக்கு வெறுப்பா இருக்குடி சும்மா நைட் ரெண்டு மணிக்கு மெசேஜ் என்னமோ ஏதோன்னு பார்த்தா ஐ லவ் யூ. என்னடி இது பைத்தியக்காரத்தனம்.

ம்ம் என்னமோ சொல்லிட்டே இருக்கனும்னு தோனுச்சுடா அதான் , ஏன் அனுப்பினா என்ன? பார்த்துட்டு சந்தோசப்பட மாட்டீயா, தூங்காம எல்லாம் ஒருத்தி மெசேஜ் பண்றாளேன்னு , என் ரூம் மேட் கேட்கிறா ஏங்க எதும் ரகசிய போலீஸ் வேலையா பார்க்கிறீங்க மிட் நைட்ல எல்லாம் மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு இருக்கீங்கன்னு , நான் என்னத்தை சொல்ல அவக்கிட்ட, நான் லவ் பண்றது ஒரு முசுடைன்னு சொல்லவா முடியும் ஹிஹின்னு வழிஞ்சு வச்சேன்.

இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி ,

ஆமாண்டா ஓவர்தான் ஆபிஸ் டைம்ல போன் பண்ணி , போன்ல முத்தம் கேட்டு தரலைன்னா திட்றதைவிடவா இது ஓவர். என்னைக்காச்சும் என் பிரச்சனை என்னன்னு யோசிச்சு இருக்கியா? எனக்கு எத்தனை சங்கடங்கள் இருக்குன்னு , அப்பாக்கிட்ட பொய் சொல்றேன், தம்பிக்கிட்ட பொய் சொல்றேன். ப்ரண்ட்ஸ் எல்லார்க்கிட்டேயும் பொய் சொல்றேன்.

ஏண்டி பொய் சொல்லனும் போய் எல்லார்க்கிட்டேயும் சொல்ல வேண்டியதுதானே, நான் கென்னை லவ் பண்றேன்னு , அதுல என்ன தயக்கம் , லவ் பண்றீயா இல்லையாடி, சும்மா டைம்பாஸ்ன்னா இப்போவே சொல்லிடு, நான் வேற யாரையாச்சும் பார்த்துக்கிட்டுப் போறேன். நேத்துக்கூட என் பக்கத்து சீட் பொண்ணு ஏக்கமா பார்த்துட்டுபோனா

எவ அவ, அவக்கிட்ட நீ பேசி வை, உனக்கு இருக்குடா, போன் பில் ஸ்கேன் பண்ணி அனுப்பி வைக்க சொன்னேன் வச்சீயா நீ, எவக்கூட எல்லாம் கடலைப்போடுறேன்னு கண்டுப்பிடிச்சிடுவேன்னு தானே அனுப்ப மாட்டேன்றா.

அடி என் அறிவுக்கொழுந்தே, எருமைமாடே ஏர்டெல் ஆன்லைன் ஐடி பாஸ்வேர்ட் உன்கிட்டதாண்டி இருக்கு , அதுல டீடெய்ல்டு பில்ன்னு ஒரு ஆப்சன் இருக்கு , அங்க டவுன்லோடு பண்ணி செக் பண்ணிக்கோடி பன்னாட நாயே, உன் சந்தேகப்புத்திக்கு தாண்டி என்னை எவக்கிட்டேயாவது சும்மாவாச்சும் பேச வைக்குது , தப்பி தவறி பேசுறவங்க கிட்டேயும் தெருக்கொழாய் சண்டைப்போடுற பொம்பளைங்க மாதிரி பேசி விரட்டி அடிக்கிற. ஏண்டி உம் புத்தி இவ்ளோ சாக்கடையா இருக்கு. நான் சும்மா ப்ரண்ட்லியா யார்க்கிட்ட பேசினாலும் ஏன், உன் சந்தேகப்புத்தி தீர மாட்டேங்குது. உன் ப்ரண்ட்ஸ் எத்தனைப்பசங்க இருக்காங்க, நான் என்னைக்காச்சும் கொறை சொல்லியிருக்கேனா? என்னை மாதிரி நாகரீகம் எல்லாம் எப்போடி கத்துக்கப்போறே..,

ஆமாம் பெரிய நாகரீகம் கத்துக்கொடுக்க வந்திருக்க நீ, நாயே மிஸ் யூ மெசேஜ் போன்ல பார்த்துட்டு ஒரு வாரம் என்னன்னு சொல்லாம என்னை எத்தனை சித்தரவதை பண்ணின, கடைசியா அது என் ரூம் மேட் ரம்யா அனுப்பினதுன்னு தெரிஞ்சப்போ எப்படி வழிஞ்ச, நீ நாகரீகம் பத்தியெல்லாம் நடத்துறது ரொம்ப கொடுமைடா கென்னு. அதென்னடா கோவம் வந்தா என் கண்ணைப்பார்க்காம வேற எங்கேயே பார்த்து பேசுற, அதுவும் இந்த நிமிசத்தோட உனக்கும் எனக்கும் எதுவுமில்லன்னு சொல்ற எபக்ட்ல , மவனே இடையில விட்டுப்போய்டுலாம்னு எல்லாம் நினைக்காத, உன்னை வாழ விடவே மாட்டேன்.

ஐ லவ் யூடி பரதேசி நாயே! பெரிய ரவுடி மிரட்டுறா, விட்ட ஒரு அறைக்கே ஒரு வாரம் கன்னம் வீங்கிக்கிடந்தவ பேசுறா, பேச்சு மட்டும் இல்லாட்டி அய்யய்யோ உன்னை நினைச்சா

நான் எவ்ளொ சாப்ட் தெரியுமாடா, உன்கிட்ட தான் கெட்ட வார்த்தையெல்லாம் கத்துக்கிறேன், அதுவும் எல்லாத்துக்கும் மயிறு சொல்ற நீ , எனக்கும் இப்போ அந்த வார்த்தைதான் பேவரைட். அன்னைக்கு ஹாஸ்டல்ல ஏதோ வார்டன் பத்திப்பேசிட்டு இருந்தாங்க , நான் சும்மா இல்லாம அவ ஒரு மயிறுங்கன்னு சொல்லிட்டேன். என் ப்ரண்ட்ஸ் எல்லாம் ஆச்சர்யமாகிட்டாங்க, எனக்கு வெக்கமாப்போச்சு. கருமம் பிடிச்ச வார்த்தையா கத்துக்கொடுக்கிற, என்னைக்காச்சும் உருப்படியா ஏதும் சொல்றீயா. போடா.

சரிடி ரூம் போறேன் , என்ன அவசரம் பேசிட்டு போடா, நான் சொல்றப்போதான் நீ போகனும்
பெரிய புடுங்கி நீ , நீ சொல்றதை நான் கேட்கனும் போடி , லாக் ஆப் பண்றேன், வேணும்னா கால் பண்ணு அது கூட எனக்கு மூட் இருந்தா எடுத்துப் பேசுறேன். பை , பை.

டேய் போகாத, உனக்காகத்தான் உட்கார்ந்திட்டு இருக்கேன். மரியாதையா சம்பளம் வாங்கி என்னப் பண்ணினேன்னு இன்னம் சொல்லலை நீ, வீட்டு வேலைக்கு பணம் அனுப்பினீயான்னு சொல்லலை, மரியாதையா சொல்லிட்டுப் போ, போன்ல கேட்டா சாட்ல சொல்றேன்னு சொல்ற, சாட்ல கேட்டா போன்ல சொல்றேன்னு ஏமாத்திட்டு இருக்கேடா. டேய் இருக்கியா? டேய் மவனே இரு

செல்போன் அதிர்ந்து அடங்கியது. I HATE UUUUUUUU என்பதாய். சிரித்துக்கொண்டேன். 



22 சொல்லிட்டுப்போனவங்க:

  1. இது புனைவு மட்டும்தான் சொந்தக்கதையில்லை :)

    ReplyDelete
  2. காதல் சொட்டு சொட்டாய் பதிவெங்கும், மழையில் நனைந்தேன்... ஏங்க என்னைய மாதிரி சின்ன புள்ளைங்கள(!) கெடுக்கிறீங்க... இப்ப எங்களுக்கும் காதல் ஆசயெல்லாம் வருதுயில்ல... ;)

    ReplyDelete
  3. //என்னிடம் கேட்காதே
    சொல்கிறபோதே
    தருவதாய் அசையும்
    உன் இதழ்களை
    என்ன செய்வது//

    மொதொ வரியே ultimate :)

    ReplyDelete
  4. ஆஹா... இவ்ளோநாள் மிஸ் பண்ணிட்டேனே இந்த வலைப்பக்கத்த..
    :)

    ReplyDelete
  5. புனைவுன்னா சரிதான்.

    கவிதை சிறப்பு.

    ReplyDelete
  6. Thx china payan DR ashok, Arumugam , Karunakarasu :)

    ReplyDelete
  7. அடங்க மாட்டீரா நீர்? :-)

    சற்றுநேரம் ஒழுகலில் இருந்தேன்.

    fantastic ken!

    ReplyDelete
  8. NANDRINGA PARA :) neer ellam venam neenney solalam

    ReplyDelete
  9. //அடி என் அறிவுக்கொழுந்தே, எருமைமாடே //

    காதல் பொங்கி வழிகிறது ! (ஆமாம் வேலை பிசி பிசின்னீங்க நெறைய டைம் கிடைக்குதோ?)
    :))))

    ReplyDelete
  10. அடிக்கடி எழுதுங்கள் கென்.

    ReplyDelete
  11. அட்டகாசம்!

    ReplyDelete
  12. Thx ayils boss ithelam draftla irunthathai publish paninen

    Thanks Baski will try to write , thx mohan :)

    ReplyDelete
  13. :) already buzz-il padichchathuthan. pen padhivar peyarai paarththaale payamaa irukkunnu sonneenga. athaan verum smiley :)

    ReplyDelete
  14. ஐ ஹேட் யூ.....டா!

    ReplyDelete
  15. Thx Vidhoosh , amanga payamthan enakku

    I too manjoor anna ennai sonnen :)

    ReplyDelete
  16. ஒரு தமிழ் படம் பார்த்த திருப்தி...

    ReplyDelete
  17. அழகான கவிதையோடு தொடங்கும் ஒரு காதல் புனைவு
    ரொம்ப நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  18. to display only post titles as like s.ramakrishnan having in his blog follow d steps in this site http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

    Thursday, June 10, 2010 6:10:12 AM GMT+04:00


    to have label in drop down format follow steps in http://jacqsbloggertips.blogspot.com/2010/02/how-to-create-dropdown-labels-menu-in.html

    June 10, 2010 7:41 AM

    ReplyDelete
  19. hi,

    Important subject: just show only post titles instead of showing both post title and its content.

    Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

    Please not these 3 things:

    1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

    2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

    3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

    So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

    A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

    For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

    http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

    (If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

    ReplyDelete
  20. வணக்கமய்யா...(எலிமெண்டரி இஸ்கூல் ரேஞ்சில் படித்துக்கொள்ளவும்)

    ReplyDelete
  21. கும்பிடுறேன் சாமியோவ்!

    ReplyDelete
  22. hmmmmmmmmm....
    kkkkummmmmmmmmm...!
    :-)))))))))))

    ReplyDelete