27-Jun-2010

27.06.2010

இன்றைக்கு முப்பதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறேன் . திடீரென நிறைய வயதாகிவிட்ட மனநிலை என்றாலும் முப்பது வயது வரைக்கும் நான் இருப்பதே பெருமித உணர்வைத்தான் தருகிறது. படித்து விட்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற முன் முடிவுகள் எதுவுமில்லாமல் சென்னையில் வந்திறங்கிய நாளை நினைத்துக்கொள்கிறேன். எண்ணூறு ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த வேலை , திமிரும் கோபமும் பிடிவாதமாய் எங்கெங்கே நகர்ந்து சுற்று சுழன்று எங்கோ வந்து நிற்கிறது. 

முப்பது என்பது பெரிய ஆண்டுகள் தான் இதுவரைக்கும் ஒருவரிடம் கூட நான் ஒழுங்கான , சமூகம் எதிர்பார்க்கிற மனிதனாக நடந்துக்கொண்டதில்லை. என்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை எல்லாம் நான் மறுதலிக்கவோ , மாற்றிடவோ நினைத்ததுமில்லை. முன்கோபமும் , வெறித்தனமுமாய் என் நட்பை , உறவை , காதலை எல்லாவற்றையும் இழந்தும் பெற்றும் நிற்கிறேன். இந்த திமிரின் எல்லை எதுவரைக்கும் என்கிற கேள்விக்கு சாகிற வரைக்கும் இப்படித்தாண்டா என்கிற உட்குரல் பதிலாய் எதிரொலிக்கிறது. 

என்னால் சமூக , குடும்ப வரையறைக்குள் அடங்கிட முடியவில்லை, இறை நம்பிக்கையின் பக்கம் நிற்கவும் முடிவதில்லை. போலி புன்னகைகள், பொய் உறவுகள் என்கிற எல்லைகளின் உள்ளேயே ஓடிப்பிடித்து விளையாட ஆசையுமில்லை. நான் மிகப்பொய்யானவன், தேவைக்காக எதையும் செய்கிறவன், எல்லா வரையறைகளையும் உடைத்து சுயநலம்கொள்கிறவன் என்கிற பேச்சுக்களை மறுப்பதற்கும் இல்லை.

இனி என்ன என்கிற கேள்விக்கு விடைத்தேவையேயில்லை, இன்னுமொரு ஐந்து பத்து ஆண்டுகள், எனக்கான நிகழும் மரணத்தை நான் அனுபவத்த படி , எனக்காய் நானே நான் மட்டுமே அழுதபடி சிரித்தபடி , இப்படி ஒருவன் இருந்தான் என்கிற சுவடுகள் ஏதுமில்லாமல் துடைத்தெறிந்து விட்டு போய் விட வேண்டும். அப்படியெதுவும் நிகழாமல் நானும் உங்களைப்போல வாழ்ந்திடுவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கும் இல்லை. 

எது எப்படியிருப்பினும், என்னை என் எல்லாக்குறைகளுடனும் நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பர்கள், என் தொல்லைகளை சகித்துக்கொண்ட நட்புகள், என்னை நோக்கிய எல்லா பிரச்சனைகளிலும் பங்கெடுத்துக்கொண்டவர்கள் என்கிற என் எல்லா நட்புகளுக்கும் நன்றி கூறுவதைத் தவிர வேறென்ன செய்யப்போகிறேன். சென்னைக்கு வருகையில் சரக்கு வாங்கித்தருவதை தவிர்த்து..,

பிறந்த நாளை நிறைய ஆண்டுகள் யோசித்ததேயில்லை, இதை சரியாக நினைவில் வைத்திருந்ததும் இல்லை.  ஆனால் 2007 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய என் பிறந்த நாளுக்கான நினைவூட்டல்கள், வாழ்த்துகள், மின்னஞ்சல்கள், செல்பேசி குறுஞ்செய்திகள் என்கிற இப்போது சிறிது சலிப்பையே ஏற்படுத்துகிறது. 

நாளைக்கு எனக்குப்பார்ட்டி தரவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிற ஜோஸ்கனை போடி மயிறு என நினைத்துக்கொள்கிறேன்.  நான் உன் மோசமான பிரண்ட் என்று மின்னஞ்சல் வாழ்த்து அனுப்பியவளை கன்னத்தில் அறைவதாய் நினைத்து சந்தோசமடைகிறேன். 

அற்பமான வாழ்வில் நொடி கோபங்களுக்குள் தீப்பிடித்து எரிக்கிற உக்கிர வன்ம மனம் என்னை விட்டு சிறிது விலகியிருந்தால் நன்றாயிருக்கும் என்பதாய்ப்படுகிறது. இந்த நள்ளிரவின், தனித்த பாலையின் , ஒற்றையறையில் எரிகின்ற மின் விளக்கில் உன் உருவம் வரைந்து மகிழ்கிறேன். நாளைக்கோ அல்ல மற்ற நாளைக்கோ எல்லாம் மறந்த நிலையில் ஒரு ஆச்சரியக்குறியுடன் வாழ்த்தனுப்பக்கூடும் என்கிற நம்பிக்கையில் தேவடியா செருக்கிக்கு , ஒரு போன் பண்ணனும்னு கூடத்தோணல என்கிற மனதை எதுவும் செய்யமுடியாமல் வெறிக்கிறேன்.

எல்லாம் புனைவாய் சொல்வதில் இருக்கும் வலியை எரிச்சலை நிராகரிப்பை துக்கத்தை காதலை மற்றும் என்னை என்னவாய் புரியவைப்பது என்பதில் மனம் சோர்வைத்தான் பதிலாய்த்தருகிறது.

முப்பது வயது மற்றும் இன்னமும் நிற்காமல் தொடர்கிற வாழ்வுமாய் 


வெளிர் நிறப்பறவையொன்றின்
மென்குரல்
வாகன இரைச்சல்களில் புலப்படவில்லை 

கதிர் நிற பூவொன்றின் 
சிறு மணம்
புழுதிக்காற்றில் நுகர்ந்திடவும் இல்லை

துறுதுறுக்கும் எறும்பொன்றின் தவிப்பு 
புற்று சேர்க்க
மனம் வரவில்லை

அகம் இழந்த புறம்தனில் 
வாழ்வு என்பது யாது.

என் பிறந்த நாளுக்கும் வாழ்த்துகளை சொல்லிய , சொல்லப்போகிற , எரிச்சல் படுகிற எல்லாருக்கும் நன்றிகள்.
-- 

21 சொல்லிட்டுப்போனவங்க:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் கென்!

    ReplyDelete
  3. உங்கள் மனதின் ஊடக சில நிமிடங்கள் பயணம் செய்தேன்...நல்ல பதிவு...பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ரொம்ப ஓப்பன் டைப்போ?நீங்க?

    ReplyDelete
  5. சரி போகட்டும் .நீங்களாகவே இது வரை இருக்கிறீர்களே அதுவே பெரிசு.
    அட போடி ன்னு திட்டவேண்டாம் ...இருப்பினும் வாழ்த்துக்கள்.
    மலரும் நண்பா !

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பாஸ் :)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கென்.

    ReplyDelete
  8. ஐயோ தல..வாழ்த்து சொல்லலாமா கூடாதா? ஒரே குழப்பமா இருக்கு. இந்தா புடிச்சிக்கோங்க வாழ்த்துக்கள்!:)

    ReplyDelete
  9. //அகம் இழந்த புறம்தனில்
    வாழ்வு என்பது யாது.//

    கேள்விக்குறியில்லாத முற்றுப்புள்ளி. பதிலுக்குக் கிட்டே நெருங்கி்த் தவிப்பவர்கள் மட்டும் கேட்கக்கூடிய கேள்வி. :(
    பெருந்தேவி

    ReplyDelete
  10. நன்றிகள் ஆறுமுகம் , செல்வராஜ்,பா.ராஜாராம்,ராசராச சோழன்,செந்தில்குமார், பத்மா ( போடின்னு எல்லாம் சொல்ல மாட்டேன் ;)),மாயுரம் கொண்டான் அலைஸ் ஆயில்ஸ்,முத்துவேல், நடேஷ்

    ReplyDelete
  11. நன்றி பெருந்தேவி கேள்விக்குறியில்லாத முற்றுப்புள்ளி ;)

    ReplyDelete
  12. வயசானதுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. சரி அப்படியே இருந்து தொலையுங்கள்... உங்களுக்கு பிடிச்சுருந்தா... :)

    ReplyDelete
  14. வாழ்த்துகள் பாஸ்...

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. நன்றி ஆடுமாடு, அசோக்,பாஸ்கி , மோகன் :)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் தலைவரே...வெறுசா சொல்ல மனமில்லை. ஊருக்கு வாங்க நெடுங்காடு போயி பேசலாம்...

    ReplyDelete
  18. நன்றிங்க பாலாசி நெடுங்காடு போகலாம் :)இப்போ நல்லாத்தூர்லேயே இருக்குங்க

    ReplyDelete