நிறம் 1.
ஆரஞ்சு நிறப்பந்தை நீலநிறமென்றே
அழைக்கிறாள் சஹானா
மஞ்சளின் நிறம் கறுப்பென்றாகிறது
வெள்ளையின் நிறம் ரோஸ் என்கிறாள்
மாறிப்போன வண்ணத்தின் பெயரில்
எல்லாமும் நிறமிழக்கின்றன
இதுவரை அழைப்பட்டவைகள்
வேறான பின்
வானத்தை என்னவென்பாள்
காத்திருக்கிறேன்.
நிறம் 2.
நிறங்களிலானவளின் தோள்களைப்பற்றும்
கொடியாகிறேன்
படர்ந்திட்டவனின் விரல்களில்
அவளொரு இழையாகிறாள்
கலவையின் குழப்பத்தில் கிளைத்திட்ட
புதுவண்ணம்
தேகங்களின் இயைந்த உருமாற்றத்தில்
வானவில்லாய் ஒளிமாற்ற
ராட்சச வண்ணத்துப்பூச்சியாகி றாள்
தூரத்தில் மூங்கில் துளைத்ததன் ராகமிசைக்க
நிறமாறிடுகிறது
காடும்
கொடியாகிறேன்
படர்ந்திட்டவனின் விரல்களில்
அவளொரு இழையாகிறாள்
கலவையின் குழப்பத்தில் கிளைத்திட்ட
புதுவண்ணம்
தேகங்களின் இயைந்த உருமாற்றத்தில்
வானவில்லாய் ஒளிமாற்ற
ராட்சச வண்ணத்துப்பூச்சியாகி
தூரத்தில் மூங்கில் துளைத்ததன் ராகமிசைக்க
நிறமாறிடுகிறது
காடும்

நிறங்களில் விளையாடியுள்ளீர்...
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteநிறம் 1 பிடிச்சிருக்குங்க.
ReplyDelete/அழைப்பட்டவைகள்/
அழைக்கப்பட்டவைகள்
இரண்டு கவிதைகளும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கென்.
ReplyDeleteநன்றிங்க சங்கர், வேலு, செல்வராஜ், சுந்தர் :)
ReplyDeleteரெண்டுமே ரொம்ப அழகா இருக்கு
ReplyDeleteதூரத்தில் மூங்கில் துளைத்ததன் ராகமிசைக்க
காதிலே கேக்குது கானம்
வாழ்த்துக்கள் .
நிறங்கள் இரண்டும் வேறுவேறாய்... நன்று :)
ReplyDeleteநன்றி பத்மா , நன்றி அசோக்
ReplyDeleteஇரண்டும் நன்று!
ReplyDeletemudhal kavdihai arumainga :)
ReplyDeleteநன்றி விக்டர் , அஷீதா :)
ReplyDelete